தமிழ் News

பொங்கலுக்கு கூடுதல் பச்சரிசி: தமிழக அரசு

சென்னை, டிசம்பர் 28: அரிசிக்குரிய குடும்ப அட்டை வைத்திருக்கும் அனைவருக்கும் பொங்கல் பண்டிகைக்கு கூடுதலாக பச்சரிசி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் முறையாக வழங்குவது குறித்த ஆய்வுக்கூட்டம் சென்னையில் நடந்தது. உணவுத்துறை அமைச்சர் இரா.காமராஜ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் அமைச்சர் கூறியதாவது:-

ஜனவரி 1-ந்தேதி முதல் மாத இறுதி வரை அனைத்து கடைகளிலும் போதிய இருப்பு வைத்துக் கொண்டு, ரேஷன் கார்டுதாரர்கள் வழங்க வேண்டிய பொருட்களை உரிய ஒதுக்கீட்டில் வழங்கப்படுகிறது. முதல்-அமைச்சரின் உத்தரவுபடி ஆந்திரா, பஞ்சாப் மாநிலங்களிலிருந்து கொண்டுவரப்பட்ட தரமான பச்சரிசி (அரிசி வாங்கும் ரேஷன்கார்டுதாரர்கள்) அனைவருக்கும் வழங்கப்படும்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வழக்கமாக வாங்கும் 20 கிலோ அரிசியில் அவர்களுக்கு வேண்டிய அளவு பச்சரிசி வாங்கி கொள்ளலாம். அதேபோல் துவரம்பருப்பு, உளுத்தம் பருப்பு, பாமாயில், சர்க்கரை, கோதுமை ஆகியவையும் மானிய விலையில் வழங்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ரேஷன் கார்டுகளில் 2013-ம் ஆண்டு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் உள்தாள் ஒட்டும் பணி நடக்க உள்ளது. குடும்பதலைவர் அல்லது 18 வயதிற்கு மேற்பட்ட ரேஷன்கார்டில் பெயர் உள்ள உறுப்பினர்களில் ஒருவர் ரேஷன்கடைகளுக்கு சென்று உள்தாள் ஒட்டிக்கொள்ளலாம்.

தரமற்ற பொருட்களை பொதுமக்களுக்கு விநியோகம் செய்யாமல் அதனை மீண்டும் கிடங்குகளுக்கு திருப்பி அனுப்பவும் கடைகாரர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் தரமான பொருட்களை பெறுதல் ஆகிய பணிகளை கண்காணிக்கும் பொருட்டு மண்டல அளவிலான கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

உணவுத்துறை செயலாளர் எம்.பி.நிர்மலா, குடிமைப்பொருள் வழங்கல் துறை ஆணையாளர் பி.எம்.பஷீர் அஹமது, நுகர்பொருள்வாணிப கழக நிர்வாக இயக்குநர் எம்.சந்திரசேகரன், கூட்டுறவுத்துறை கூடுதல் பதிவாளர் வி.கலையரசி உட்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Dec 28, 2012
More News

Post Your Comments
Name*  
City  
Country  
Email*  
Comments*  
Security Code*
   
     
 
Comments
i think that is best
By antony on 29/12/2014 at 06:49 PM
 
 
More தமிழ் News
 
 
 
Top Stories
 
Photo Gallery
 
Videos

Trailer of Neethane En Ponvasantham

Trailer of 'Nanban'