தமிழ் News

பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்

சென்னை, டிசம்பர் 28: தேசிய பயங்கரவாத தடுப்பு மையத்தை மாநில முதல்வர்களுடன் கலந்து ஆலோசித்த பிறகே இறுதி செய்ய வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில், "மத்திய உள்துறை அமைச்சகம் கொண்டு வர திட்டமிட்டுள்ள தேசிய பயங்கரவாத தடுப்பு மையத்தால், மாநில அரசுகளின் பாதுகாப்புப் பணிகளும், காவல்துறையின் சுதந்திரமான போக்கும் பாதிக்கப்படும். மேலும், ஒரே அமைப்பின் கீழ், அனைத்து மாநில பாதுகாப்பும் கொண்டு வரப்படும்போது அது சவாலாக மாறவும் வாய்ப்பு உள்ளது. எனவே  அனைத்து மாநில முதல்வர்களும், தேசிய பயங்கரவாத தடுப்பு மையத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். அந்தந்த மாநில பாதுகாப்புகள் அந்தந்த மாநில அரசுகளிடமும், காவல்துறையிடமும் இருப்பதுவே சிறப்பாக இருக்கும் என்று அனைத்து முதல்வர்களும் கருதுகின்றனர்.

எனவே, மத்திய உள்துறை அமைச்சகம், தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் குறித்து எந்த ஒரு முடிவையும் இறுதி செய்வதற்கு முன்பு, அனைத்து மாநில முதல்வர்களிடமும் கருத்துக் கேட்டு, அவர்களது அனுமதிக்குப் பிறகே செயல்படுத்த வேண்டும் என்று இந்த கடிதத்தின் வாயிலாகக் கேட்டுக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

Dec 28, 2012
More News

Post Your Comments
Name*  
City  
Country  
Email*  
Comments*  
Security Code*
   
     
 
Comments
 
 
More தமிழ் News
 
 
 
Top Stories
 
Photo Gallery
 
Videos

Trailer of Neethane En Ponvasantham

Trailer of 'Nanban'