தமிழ் News

"தமிழக முதல்வரை பிரதமர் அவமதிக்கவில்லை"

புதுச்சேரி, டிசம்பர் 29: தில்லியில் நடைபெற்ற தேசிய வளர்ச்சிக்குழுக் கூட்டத்தில் தமிழக முதல்வரை அவமதிக்கும் விதமாகப் பிரதமர் ஏதும் செய்யவில்லை என்று மத்திய இணையமைச்சர் நாராயணசாமி கூறினார்.

புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியின் 128-வது உதயநாள் விழா கட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. மாநிலத் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். "உங்கள் பணம் உங்கள் கையில்' எனும் திட்ட விளக்கக் கையேட்டை வெளியிட்டு பேசிய மத்திய இணையமைச்சர் நாராயணசாமி,

"தில்லியில் நடைபெற்ற தேசிய வளர்ச்சிக்குழுக் கூட்டத்தில் பேச 40 பேருக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. அனைத்து மாநில முதல்வர்களுக்கும் தலா 10 நிமிடங்கள் அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது.

10 நிமிடங்கள் ஆனதும் சிகப்பு விளக்கு எரியும், மணி ஒலிக்கப்படும். இதை அனைத்து மாநில முதல்வர்களும் ஏற்றுக்கொண்ட பிறகுதான் கூட்டம் தொடங்கியது.

ஆங்கில அகர வரிசைப்படியே மாநிலங்களின் முதல்வர்களைப் பேச அழைப்பது வழக்கம். அதன்படி, ஆந்திர முதல்வர்தான் முதலில் பேசியிருக்க வேண்டும்.

கூட்டம் தொடங்கியதும் தாமாக முன்வந்து தமிழக முதல்வர் ஜெயலலிதா முதலில் பேச அனுமதி கேட்டதும், பிரதமர் ஏற்று அவரைப் பேச அழைத்தார்.

10 நிமிடங்களில் மணி ஒலிக்கப்பட்டது. அப்போது, படிக்காத உரையை படித்ததாக நினைத்துக்கொள்ளுங்கள் எனக் கூறிய ஜெயலலிதா, வெளிநடப்பு செய்வதாக ஏதும் கூறவில்லை.

தொடர்ந்து ஜார்க்கண்ட் மாநில முதல்வர் பேசித் தொடங்கி 4 நிமிடங்களுக்குப் பிறகே, முதல்வர் ஜெயலலிதா வெளியே சென்று, வெளிநடப்பு செய்ததாகக் கூறியுள்ளார்.

இதுவரை 6 தேசியக்குழுக் கூட்டத்தில் பங்கேற்றிருக்கிறேன். அதில் எல்லா முதல்வர்களுக்கும் 10 நிமிடங்கள் மட்டுமே நேரம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இது தமிழக முதல்வருக்கு வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம்.

குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பேசும்போது 10 நிமிடங்கள் ஆனதும் ஒலி எழுப்பப்பட்டது. மேலும் 5 நிமிடங்கள் பேச அனுமதி கேட்டார். இதை பிரதமர் அனுமதிக்கவில்லை. ஆனால், இதற்காக மோடி வெளிநடப்பு செய்யவில்லை" என்று கூறினார்.

Dec 29, 2012
More News

Post Your Comments
Name*  
City  
Country  
Email*  
Comments*  
Security Code*
   
     
 
Comments
 
 
More தமிழ் News
 
 
 
Top Stories
 
Photo Gallery
 
Videos

Trailer of Neethane En Ponvasantham

Trailer of 'Nanban'