தமிழ் News

மதுக்கடைக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம்

சென்னை, டிசம்பர் 28: 2013-ஆம் ஆண்டு மதுக்கடைகளை மூடக் கோரி காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் தெரிவித்துள்ளார்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் 128-வது ஆண்டு தொடக்கவிழா சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று காலை கொண்டாடப்பட்டது. இதையொட்டி அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த மகாத்மா காந்தி மற்றும் தேசிய தலைவர்கள் உருவ படங்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் சத்தியமூர்த்தி பவன் வளாகத்தில் உள்ள கொடிக்கம்பத்தில் கொடி ஏற்றி அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஞானதேசிகன், "தில்லியில் நடந்த தேசிய வளர்ச்சி கூட்டத்தில் தன்னை 10 நிமிடம்தான் பேச அனுமதித்தார்கள் என்று கூறி முதலமைச்சர் ஜெயலலிதா வெளி நடப்பு செய்துள்ளார். கூட்டத்தில் அனைத்து முதலமைச்சர்களுக்கும் சம வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது யாருக்கும் பாரபட்சம் காட்ட வில்லை.

ஜெயலலிதா சொல்வது தவறான குற்றச்சாட்டு. கூட்டத்தில் தமிழக முதல்வரை தனிமைப்படுத்தவோ, அவமானப்படுத்தவோ இல்லை. அவரது கருத்து ஏற்புடையது அல்ல .

மத்திய அரசை பொருத்தமட்டில் எந்த அளவு நிதி ஆதாரம் தர முடியுமோ அதைவிட அதிகமாகத்தான் அளித்து வருகிறது. ஊரகத் துறைக்கு பல்வேறு நிதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மின் பற்றாக்குறையை போக்க மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

தென் மாநிலங்களுக்கு ஒதுக்கும் மின்சாரத்தில் 33 சதவீதம் தமிழகத்துக்கு வழங்கப்படுகிறது. வல்லூரில் 347 மெகாவாட் மின்சாரம், மேட்டூரில் 600 மெகாவாட் மின்சாரம், வட சென்னையில் 1200 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் அளவுக்கு பணிகள் நடந்து வருகிறது. செய்யூரில் அல்ட்ரா மெகா பிராஜக்ட் புதிதாக தொடங்கப்பட உள்ளது.

தமிழ்நாட்டில் மதுக்கடைகள் மூலம் ரூ.23 ஆயிரம் கோடி வருமானம் வருகிறது. மதுவினால் சமூகம் சிரழியும். 2013-ஆம் ஆண்டு மதுக்கடைகளை மூடக் கோரி காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடத்தப்படும். தில்லியில் மாணவி கற்பழிக்கப்பட்ட சம்பவத்தை ஊடகங்கள் பெரிது படுத்தியதால் விசுவரூபம் எடுத்து உள்ளது. இது போன்ற சம்பவம் எல்லா மாநிலத்திலும் நடக்கிறது. ஆபாச திரைப்படங்களுக்கு தடைவிதிப்பது போல் இணைய தளத்திலும் ஆபாச காட்சிகளுக்கு தடை விதிக்க வேண்டும்" என்று கூறினார்.

Dec 28, 2012
More News

Post Your Comments
Name*  
City  
Country  
Email*  
Comments*  
Security Code*
   
     
 
Comments
 
 
More தமிழ் News
 
 
 
Top Stories
 
Photo Gallery
 
Videos

Trailer of Neethane En Ponvasantham

Trailer of 'Nanban'