Features

இதுவன்றோ பெண்கள் நிலை

வருடா வருடம், உலகம் முழுவதும், பெண்களால் மட்டுமே கொண்டாடப்படுவதற்காக வரும் தினம் மகளிர் தினம்.
சென்ற வருடம் அல்லது முந்தைய வருடங்களில் பெண்களுக்கு, நாட்டில், உலகில் என்ன புதிய சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. . . ?

ஆயிரத்தில் ஒரு பங்கு பெண்கள் மட்டுமே, காய்ச்சிய பாலில் ஏடு கட்டி வருவது போல முன்னேறி உள்ளனர்.
அதிலும் கணக்கெடுத்தால், சமூக, பொருளாதார அந்தஸ்துள்ள, நல்ல குடும்ப பின்னணியில் படிப்பும், ஆதரவும் உள்ள பெண்கள் மட்டுமே மேலேறி வந்துள்ளனர்.

மிகச் சில ஏழைப் பெண்கள், தங்கள் உழைப்பாலும், முயற்சியாலும் மட்டுமே உயர்ந்துள்ளனர்.
இன்னும் நாடு, நகரம், கிராமங்களில் 'பெண் சிசுக்கொலைகள் நடந்து கொண்டே இருக்கிறது. அதுவும் விஞ்ஞான, அறிவியலின் துணையோடு - ஒரு துளி இரத்தம் மூலம் கரு ஆணா, பெண்ணா என ஸ்கேனிங் மூலம் அறிந்து அழிப்பது நிகழ்ந்து கொண்டே இருக்கும் ஒரு பயங்கரம்.

பெண்களின் கல்வி, உயர்கல்வி, நல்ல கல்வி என்பது இன்னும் கிராமங்களை பொறுத்தவரை கனவே. நாட்டில் வேலை இல்லாத படித்த ஆசிரியர்களை சற்று உயர்ந்த சம்பளத்துடன் கிராமங்களுக்கு அனுப்பலாமே. இதனால் அரசாங்கத்திற்கு நஷ்டம் ஏதும் இல்லை. வருங்கால படித்த பெண்களால் நாடும், வீடும் முன்னேறும்.

பரவலாக பெண் குழுக்கள் மூலம் தரப்படும் கடன்கள் பெண்களால் கையெழுத்திடப்பட்டு ஆண்களின் பாக்கெட்டுகளுக்குள் செல்கின்றன. ஒரு ஐந்து சதவீதம் பெண்கள் மட்டுமே நல்ல முறையில் உபயோகப்படுத்துகின்றனர்.
இன்னும் பெண்களுக்கு முதுமையின் கொடுமை நீங்கவில்லை. நல்ல காப்பகங்கள் நிறைய தேவை. பிச்சைக்காரர்களில் கூட பெண்கள் தான் அதிகம்.

சினிமாவிலும், விளம்பரங்களிலும் பெண்களை இன்னும் துகிலுரித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
திருமணக் கொடுமைகள் - ஏழைப் பெண்களுக்கு - இன்னும் குறையவே இல்லை.
எய்ட்ஸ் கொடுமையில் பாதிக்கப்படுபவர்களில் பெண்களே அதிகம்.
33 சதவீதம் ஒதுக்கீடு - அரசியலில் பெண்களுக்கு இன்னும் கனவே.
சோமாலியா மற்றும் இலங்கை பெண்களின் அவலநிலை மாறவே இல்லை.

இந்திய மகளிரைப் பற்றி மகாத்மாவும், பாரதியும் கண்ட கனவுகள் இன்னும் மேம்பாடு அடையவே இல்லை.
மேற்கூறியவை எதிலும் பெண்களுக்கு ஒரு உண்மையான, மரியாதையோ, சமூகப் பொருளாதார பாதுகாப்போ, அங்கீகாரமோ அளிக்காமல் ஒவ்வொரு வருடமும் வெறும் 'உலக மகளிர் தினம்' கொண்டாடப்படுவதற்கு பதிலாக, ஏதேனும் ஒரு 'இலக்கை' எடுத்து அதை மேம்படுத்தினால் அதுவே தாழ்த்தப்பட்ட சமூகத்தில் துன்பங்களிலும், துயரங்களிலும் அழுத்தப்பட்ட பெண்களுக்கு செய்யப்படும் ஒரு உயரிய விடுதலையும், 'உலக மகளிர் தினமும்' ஆகும்.

More Features

ரேவதி

 
More Features
 
 
 
Photo Gallery
 
Videos

Trailer of Neethane En Ponvasantham

Trailer of 'Nanban'