Spotlight

சென்னையில் திருவையாறு - பருவம் 9

இயற்கை என்பது நீர், நிலம், காற்று, நெருப்பு, ஆகாயம். இந்த ஐம்பெரும் சக்திகளையும் அடக்கி ஆள்வதே இசை என்றால் அது மிகையாகாது. உலகின்பொது மொழி என்று சொன்னால் அது மௌனமாக பேசப்படும் சைகை மொழி எனப்படும்.  அதையடுத்து பொதுவான மொழியென்றால் இசை ஒன்றேநாடு, மொழி, மதம், சாதி போன்றவற்றைக் கடந்து பேதமற்ற ஒருமை நிலையை உருவாக்ககூடியது.

இயற்கை அமைப்புகளுக்கு இறைவன் 'பருவம்' என்ற குறிப்பிட்ட காலத்தை உருவாக்கி அதன்படி சில பருவத்தில் மட்டுமே  பூக்கும் மலர், பெய்யும் மழை,வீசும் காற்று, கொட்டும் பனி, விளையும் பயிர்கள் என படைத்துள்ளான். இதற்கிடையில் இறைவன் இசைக்கென்று ஒரு  பருவத்தைபடைத்திருக்கின்றாரா என்றால் அதுவே மார்கழி. மாதங்களில் சிறந்ததும்  மார்கழி என்பார்கள்.

அந்த மார்கழி மாதத்தைப் பற்றிச் சொல்லவேண்டுமென்றால்:


v ஆண்டாள் இயற்றிய திருப்பாவை பாடப்படும் மாதம்
v பகவத் கீதையில் “மாதங்களில் நான் மார்கழி'' என்று கிருஷ்ண பரமாத்மாவே குறிப்பிடும் மாதம்
v தில்லைச் சிதம்பரத்தில் நடராஜர் நடனம் புரிந்த திருவாதிரை திருநாள் இடம்பெறும் மாதம்
v திருவெம்பாவையை மாணிக்க வாசகர் அருளிய மாதம்
v மனுக்குலம் தழைக்க இப்பூவுலகில் மாமரிச்செல்வனாம் இயேசுபிரான்  அவதரித்த மாதமும் மார்கழி தான்
v ஹரி நாம சங்கீர்த்தனம் எனும் புனைப்பாடல்களைப் பலர் ஒன்றுகூடி பாடும் மாதமும் மார்கழி
v வாசலில் வண்ண வண்ணக் கோலங்கள்
v கோவில் கோபுரங்களில் மணியோசைகள்
v ஆலயங்களில் அபிஷேக ஆராதனைகள்
இப்படி எத்தனையோ சிறப்பு சேர்ந்ததுதான் மார்கழி. அப்படிப்பட்ட மார்கழியில்  சிறந்த ஒரு வைபவம் மார்கழி இசை விழா. அதுவே தியாகராஜர்ஆராதனை விழா.

தியாகராஜரை அறியாதோர் திருவையாறையே அறியார், திருவையாறை  அறியாதோர் தமிழகத்தையே அறியார்.

“எந்தரோ மஹானுபாவுலு அந்தரீகி வந்தனமு” என்ற மிகப்பிரபலமான தெலுங்கு பாடலுக்குச் சொந்தக்காரரும் இவரே.  எத்தனையோ சங்கீத கர்த்தாக்கள்,சங்கீத லக்ஷண கிரந்த கர்த்தாக்கள்,சாஸ்திரீ சம்பிரதாயப்படி சங்கீத உருப்படிகளை கர்நாடக சங்கீதத்தில் இயற்றியுள்ளார்கள்.

அவர்களில்முதன்மையானவராக “ஸ்ரீதியாகராஜர்” திகழ்கின்றார்.

இவர் இயற்றிய சிறந்த சங்கீத உருப்படிகளில் மிகச்சிறந்ததாகக் கருதப்படுவது  “பஞ்ச ரத்ன கீர்த்தனைகள்” ஆகும். கர்நாடக இசையில் கன ராகங்களாகக்கருதப்படும் நாட்டை, கவுளை, ஆரபீ, வராளி மற்றும் ஸ்ரீ ஆகிய ஐந்து ராகங்களில் தியாகபிரும்மம் அவர்கள்,தான் வணங்கிய ஸ்ரீராமபிரானைப்  போற்றிஇயற்றிய ஐந்து பாடல்கள் உலகம்எங்கும் இசைக்கலைஞர்களால்  இன்றும் பாடப்பட்டு வருகிறது.

இசை வாத்தியக்கலைஞர்கள் தாங்கள் இசைக்கும் கருவிகளான ஹார்மோனியம், வீணை, தவில், கஞ்சிரா, மிருதங்கம், முகர்சிங், தபேலா, வேய்ங்குழல்(புல்லாங்குழல்), ஸிதார், ஸாரங்கி, ஸரோட், ஜலதரங்கம், ஸந்தூர், வயலின், மாண்டலின், ஸாக்ஸபோன், கீபோர்டு மற்றும் பல கருவிகளில் இந்த ஐந்துபாடல்களை இசைத்து வருகின்றனர். சற்று நாம் உற்றுநோக்கில்  தென்னிந்திய இசைக் கருவிகளில் இசைக்கப்பட்ட தியாகராஜரின் பாடல்கள்  இன்று வடஇந்திய மற்றும் மேற்கத்திய இசைக்கருவிகளிலும் இசைக்கப்பட்டு வருகிறது.

இவரது பஞ்சரத்ன கீர்த்தனைகள் எப்படியெல்லாம் மதம், மொழி, நாடு, காலம்  கடந்து சிறப்புற்று விளங்குகிறது என்பதை அறியும் போது, எல்லோரும்குறிப்பாக ஒவ்வொரு இசைக்கலைஞனும் பெருமை கொள்கிறான் என்றறியலாம். அப்பெருமை வாய்ந்த பஞ்சரத்ன கீர்த்தனைகளை  ஒவ்வொருஆண்டும் தஞ்சைத்தரணியில் அமைந்திருக்கும் திருவையாற்றில்  ‘தியாகராஜர் ஆராதனை விழா’ என்ற

பெயரில் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.அறிந்தோரும் அறியாதோரும்,  கற்றோரும் கல்லாரும், கனிந்து உருகி களிப்பது ‘தியாகராஜர் ஆராதனை விழா’ என்பது ஆச்சரியம். ஆனால் அதுவேஉண்மை.

இறைவனைக் காண இசை ஒன்றுதான் வழி. இசைக்கு திசையில்லை. எண் திசையிலிருந்தும் வந்து பண்பாடும் கலைஞர்களின் ‘பஞ்சரத்ன கீர்த்தனைகளை’ செவி மடுத்துக் கேட்க கொடுத்து வைத்திருக்க வேண்டும். உலகெங்கிலும் உள்ள கர்நாடக இசை ஆர்வலர்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் உள்ளவர்கள்கூட தியாகராஜர் அவர்களின் கீர்த்தனைகளினால்  கவரப்பட்டு “தியாக ப்ரம்ஹ ஆராதனை” விழாவில் கலந்துகொண்டுவருகின்றனர்.

எல்லோரும் திருவையாற்று ஆராதனை விழாவில் கலந்து கொள்வது என்பது  இயலாத ஒன்று   

என்ற நிலையில், சென்னையில் ஏன் அப்படியொருஇசைவிழாவினை         மிகப்பெரிய அளவில் நடத்தக்கூடாது என்ற எண்ணப்பாட்டின் விளைவாக, இவ்வரிய  கலைத்துறையில் சேவையாற்றி பிரபலமாகவிளங்கும் ‘லஷ்மன் ஸ்ருதி  மியூசிக்கலஸ்’ இசைக்காக சென்னையில் ஒன்பதாம் முறையாக நடத்தவிருக்கும்             இந்த மிக பிரம்மாண்டமான இசை விழாஇசையுலக வரலாற்றில் தொடர்ந்து சகாப்தம் படைக்கும் என்பதில்  சந்தேகமில்லை.

மும்மூர்த்திகளின் ஆசியுடன் தமிழ்த்திருநாட்டின் தலைநகரமாம் சென்னையில்  வாழும் இசை உள்ளங்கள் மட்டும் அல்லாமல்  மாவட்டம், மாநிலம் மற்றும் தேசிய எல்லைகள் கடந்து இசை வேட்கையோடு வருகை தரும்  ரசிகர்களுக்காக தஞ்சை மண்ணின் தனிப்பெரும் இசைப் பாரம்பரியத்தை நிலைநாட்டவரும் நிகழ்வே “சென்னையில்திருவையாறு”. பாரத தேசத்தின்  பாரம்பரிய இசையைப் போற்றிக் காக்கும் வகையிலும்  எதிர்காலசந்ததியினருக்கும் களம் அமைத்துக்கொடுக்கும் வகையிலும் கரை  புரண்டுவரும்.

ஒரு அற்புத சங்கமம்தான் “சென்னையில் திருவையாறு”.

கர்நாடக சங்கீத கலைஞர்களுள் மூத்தவரும் பல்வேறு சிறப்புகளும்  பெற்றவருமான மரியாதைக்குரிய “பத்மபூஷன்" பி.எஸ். நாராயணசாமி  அவர்களின்தலைமையில் பெரியவர் சிறியவர் என்றவயது பேதமின்றி, வளர்ந்த  மற்றும் வளர்ந்து வரும் இளைய தலைமுறையினரும், ஆண்,பெண் பேதமின்றிஅனைத்து கர்நாடக சங்கீத இசைக் கலைஞர்களும்  ஒன்றிணைந்து ‘பஞ்சரத்ன கீர்த்தனைகளை’

பாடி திருவையாற்று ஆராதனை விழாவை நம்கண்முன்னே சென்னை காமராஜர் அரங்கில் கொண்டுவர உள்ளார்கள்.

2013, டிசம்பர் 18 முதல் 25 வரை நடை பெற உள்ள வரலாற்று சிறப்பமிக்க இந்த இசை விழாவின் துவக்க நாளான டிசம்பர் 18-ம் தேதி பிற்பகல்

11.30மணிக்கு நாதஸ்வரத்துடன் ஆரம்பமாகும. அதைத் தொடர்ந்து மாபெரும்  துவக்க விழாவாக மாலை

4.15 மணிக்கு “பத்மபூஷன்" பி.எஸ். நாராயணசாமிஅவர்களின் தலைமையில்  ‘பஞ்சரத்ன கீர்த்தனைகளை’

ஒரே மேடையில் முந்நூறுக்கும் மேற்பட்ட கலைஞர்கள் இசைத்தும் பாடியும்  வழிபடுகின்றனர்.துவக்க விழா நிகழ்விற்கு அனுமதி இலவசம்.  ‘பஞ்சரத்ன கீர்த்தனைகளை’ பாடத்தெரிந்தவர்களையும் இசைக்கத் தெரிந்தவர்களையும்     துவக்க விழாநிகழ்விற்கு வரவேற்கின்றோம். அதேபோல் ‘பஞ்சரத்ன கீர்த்தனைகளை’

தங்கள் காது குளிர கேட்டு இறைவனை இசையால் வழிபட அனைவரையும்வருகவருக என அன்புடன் அழைக்கின்றோம்.

அரங்கில் அமைக்கப்பட உள்ள மேடை அமைப்பு, பாரம்பரியம் மிக்க திருவையாறு தியாகராஜர் ஆராதனை மண்டபத்தை நம் கண்முன்னே  கொண்டுவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. முந்நூறு கலைஞர்கள்  மேடையில் அமர்ந்து துவக்க விழாவில் பஞ்சரத்ன கீர்த்தனைகள் பாடும்  அளவிற்கு வசதியுடன் மேடை வடிவமைக்கப்பட்டுள்ளது.

அரங்கில் அமர்ந்து பார்க்கும் ரசிகர்களும், கலைஞர்களும் பஞ்சரத்ன  கீர்த்தனைகளை பாடுகின்ற வகையில் அனைவர்க்கும் பஞ்சரத்ன கீர்த்தனைகள் அடங்கிய புத்தகம் தினமலர் நாளிதழ் சார்பாக அன்பளிப்பாக வழங்கப்பட  உள்ளது.

திருவையாறில் இசை வல்லுனர்களால் இசைக்கப்படும் தியாகராஜர் ஆராதனை  விழாவினை நேரில் சென்று காண இயலாத கண்களுக்கு “சென்னையில் திருவையாறு” நிகழ்வு, ஒவ்வொரு வருடமும் ஒரு வரப்பிரசாதமாக அமைந்து வருகிறது.

எட்டு நாட்கள் தொடர்ந்து நடைபெறும் இந்த இசைவிழாவில் டிசம்பர்18ம் தேதி காலை 11.30 மணிக்கு எஸ்.ஆர்.ஜி.எஸ்.மோகன் தாஸ் அவர்களின்நாதஸ்வர இசை நிகழ்ச்சியுடன் துவங்கி மாலை 4.00 மணிக்கு பஞ்சரத்ன கீர்த்தனைகளோடு துவக்க விழாவும், மாலை 5.30 மணிக்கு பிர்ஜு மகாராஜ்அவர்களின் கதக் நடன நிகழ்ச்சியும், இரவு7.30 மணிக்கு நித்யஸ்ரீ மகாதேவன் அவர்களின் வாய்ப்பாட்டு நிகழ்வுடன்  நிறைவடைந்து, முதல் நாள் நான்குநிகழ்ச்சிகளோடு நடைபெற்று தொடர்ந்து வரும் மற்ற 7 நாட்களில் தினமும் ஏழு நிகழ்ச்சிகளோடு காலை 7.00 மணிக்கு துவங்கி இரவு 10.00 மணி வரை நடைபெற உள்ளது.


அனுபந்தம் டிசம்பர் 2013

லஷ்மன் ஸ்ருதியின் சென்னையில் திருவையாறு - பருவம் 9


காமராஜர் அரங்கம் டிசம்பர் 18 - 25நிகழ்ச்சி நிரல் 2013


18.12.2013 புதன்கிழமை 


நேரம் 

கலைஞர்கள் 

பிரிவுகள் 


காலை 11.30 மணி

எஸ்.ஆர்.ஜி.எஸ்.மோகன்தாஸ்

நாதஸ்வரம்


மாலை 4.00 மணி

பி.எஸ்.நாராயணசாமி

பஞ்சரத்ன கீர்த்தனைகள்


மாலை 5.30 மணி

 

கதக்


இரவு 7.30 மணி

நித்யஸ்ரீ மகாதேவன்

வாய்பாட்டு 19.12.2013 வியாழக்கிழமை 


நேரம் 

கலைஞர்கள் 

பிரிவுகள் 


காலை 7.00 மணி

உடையாளூர் கல்யாணராமன்

நாம சங்கீர்த்தனம்


காலை 9.00 மணி

மகாலக்ஷ்சுமி

பரதநாட்டியம்


காலை 10.30 மணி

கிட்டார் பிரசன்னா

கிட்டார்


மதியம் 1.00 மணி

மது ஐயர் & ராகினிஸ்ரீ

வாய்பாட்டு


மதியம் 2.45 மணி

ஹரிசரண்

வாய்பாட்டு


மாலை 4.45 மணி

ப்ரியா சகோதரிகள்

வாய்பாட்டு


இரவு 7.30 மணி

ராஜேஷ் வைத்யா & ஸ்டீபன் டெவசி

வீணை & கீ போர்டு 

 

 20.12.2013 வெள்ளிக்கிழமை 


நேரம் 

கலைஞர்கள் 

பிரிவுகள் 


காலை 7.00 மணி

மங்கையர்க்கரசி

பக்தி பிரசங்கம்


காலை 9.00 மணி

காவ்யலஷ்மி

பரதநாட்டியம்


காலை 10.30 மணி

அமிர்தம் எனும் தலைப்பில் - கே.வி.பிரசாத் &  லியோன் ஜேம்ஸ் குழு

கர்நாடிக் ஜுகல்பந்தி


மதியம் 1.00 மணி

ஸ்ரீரஞ்ஜனி சந்தானகோபாலன்

வாய்பாட்டு


மதியம் 2.45 மணி

சாருலதாமணி

வாய்பாட்டு


மாலை 4.45 மணி

ரஞ்ஜனி காயத்ரி

வாய்பாட்டு


இரவு 7.30 மணி

மல்லாடி சகோதரர்கள் & குண்டேச்சா சகோதரர்கள்

வாய்பாட்டு 21.12.2013 சனிக்கிழமை 


நேரம் 

கலைஞர்கள் 

பிரிவுகள் 


காலை 7.00 மணி

கோவை. எஸ். ஜெயராமன்

நாமசங்கீர்த்தனம்


காலை 9.00 மணி

சாந்தி சுரேஷ்

வாய்பாட்டு


காலை 10.30 மணி

சிக்கில் எஸ். குருசரண்

வாய்பாட்டு


மதியம் 1.00 மணி

விதிஷா

பரதநாட்டியம்


மதியம் 2.45 மணி

நிர்மலா ராஜசேகர் & கவுரவ் மஜும்தார்

வீணை & சித்தார்


மாலை 4.45 மணி

ஓ.எஸ்.அருண்

வாய்பாட்டு


இரவு 7.30 மணி

 நிஷாத் கான் & சஷாங்க்

சித்தார் & புல்லாங்குழல்22.12.2013 ஞாயிற்றுக்கிழமை 


நேரம் 

கலைஞர்கள் 

பிரிவுகள் 


காலை 7.00 மணி

தாமல் ராமகிருஷ்ணன்

உபன்யாசம்


காலை 9.00 மணி

சுதா & ஷேரன் ஷெல்சியா

பரதநாட்டியம்


காலை 10.30 மணி

மகாநதி டாக்டர். ஷோபனா விக்னேஷ்

வாய்பாட்டு


மதியம் 1.00 மணி

மீனாட்சி ராகவன்

பரதநாட்டியம்


மதியம் 2.45 மணி

கிருஷ்ணகுமாரி நரேந்திரன்

பரதநாட்டியம்


மாலை 4.45 மணி

பி.உன்னிகிருஷ்ணன்

வாய்பாட்டு


இரவு 7.30 மணி

விஜய் பிரகாஷ்

வாய்பாட்டு 23.12.2013 திங்கட்கிழமை 


நேரம் 

கலைஞர்கள் 

பிரிவுகள் 


காலை 7.00 மணி

அனந்த பத்மநாபாச்சாரியார்

உபன்யாசம்


காலை 9.00 மணி

சாஸ்வதி பிரபு

வாய்பாட்டு


காலை 10.30 மணி

காயத்ரி வெங்கட்ராகவன்

வாய்பாட்டு


மதியம் 1.00 மணி

சைந்தவி

வாய்பாட்டு


மதியம் 2.45 மணி

நிஷா ராஜகோபால்

வாய்பாட்டு


மாலை 4.45 மணி

அஷ்வினி பீடே

வாய்பாட்டு


இரவு 7.30 மணி

கத்ரி கோபால்நாத்

சேக்ஸஃபோன் 24.12.2013 செவ்வாய்க்கிழமை 


நேரம் 

கலைஞர்கள் 

பிரிவுகள் 


காலை 7.00 மணி

கடலூர் கோபி

நாமசங்கீர்த்தனம்


காலை 9.00 மணி

நா.ப்ரதிக்‌ஷா தர்ஷினி

பரதநாட்டியம்


காலை 10.30 மணி

சர்ச்சில் பாண்டியன் வழங்கும் கலர்ஸ் ஆப் இந்தியா 

நடனம்


மதியம் 1.00 மணி

சொர்ணமால்யாவின் ரங்கமந்திரா நிகழ்கலை பள்ளி 

பரதநாட்டியம்


மதியம் 2.45 மணி

கர்நாடிகா சகோதரர்கள் &  ஜோத்ஸ்னா

வாய்பாட்டு / வயலின்


மாலை 4.45 மணி

எஸ்.செளம்யா

வாய்பாட்டு


இரவு 7.30 மணி

சுதா ரகுநாதன்

வாய்பாட்டு 25.12.2013 புதன்கிழமை 


நேரம் 

கலைஞர்கள் 

பிரிவுகள் 


காலை 7.00 மணி

துக்காராம் கணபதி

நாமசங்கீர்த்தனம்


காலை 9.00 மணி

சுபத்ரா மாரிமுத்து

பரதநாட்டியம்


காலை 10.30 மணி

மஹதி

வாய்பாட்டு


மதியம் 1.00 மணி

டாக்டர்.கணேஷ்

வாய்பாட்டு


மதியம் 2.45 மணி

ஷோபா சந்திரசேகர்

வாய்பாட்டு


மாலை 4.45 மணி

பர்வீன் சுல்தானா

வாய்பாட்டு


இரவு 7.30 மணி

ஷோபனா 

பரதநாட்டியம்


இசைத் திருவிழாவில்  கலந்துகொள்ள வேண்டும்.

என்ற ஆவலும் இந்த பட்டியலில் இடம்பிடித்திருக்கிறது என்று பலஎன்.ஆர்.ஐ. நண்பர்கள் கூறுவது எங்கள் நிகழ்ச்சிக்கு கிடைத்த மிகப் பெரிய  வெற்றியாகக் கருதுகிறோம்.

அதற்காகவே டிசம்பர் சீசனில் சென்னை வரும் அந்த நண்பர்கள், தங்கள் குடும்பத்தினரோடு இசை நிகழ்ச்சிகளை ரசித்துவிட்டு,  இடைவேளையின்போதுநல்ல உணவுக்காக அலைய நேர்ந்தால் அது நமக்குதானே  இழுக்கு! ஒரு டீ, காபி குடிக்க வேண்டும் என்றால் கூட காமராஜர் அரங்கில் இருந்து வெளியேறி,சாலையைக் கடந்து சிறிது தூரம் நடந்து கடையைத் தேட வேண்டியிருக்கும். தரமான உணவகம் தேடிக் கண்டுபிடித்து சாப்பிட்டு திரும்புவதற்குள், போதும் போதுமென்றாகிவிடும்.

நமது அன்புக்குரிய ரசிகர்கள் இப்படி அவஸ்தைப்படக் கூடாது என்பதற்காகவே  மிகப் பெரிய உணவுத் திருவிழாவுக்கு ஏற்பாடு செய்துள்ளோம். ஒரேஇடத்தில் மனதுக்குப் பிடித்தமான, சுவையான உணவு வகைகளின் அணிவகுப்பு உங்களை திக்குமுக்காடச் செய்யும் என்பது உறுதி.
உணவகங்கள் மட்டும் இல்லாமல் தனி மேடையில் தமிழகத்தின் தலைசிறந்த சமையல்கலை வல்லுநர்கள் தங்கள்  அனுபவங்களை சமையலில்வெளிப்படுத்தவும், பார்வயாளர்கள் தங்கள் திறமையை காட்டும் விதம் போட்டிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.ஒவ்வொரு  போட்டிக்கும்பார்வையாளர்களுக்கு பரிசுகளும் உண்டு. உங்கள் செவிகளுக்கு திகட்டத் திகட்ட விருந்து படைக்கும் சென்னையில் திருவையாறு நிகழ்ச்சிகளுக்குஇடையே...   வயிற்றுக்கும் சுவையான அமுது படைக்கவே இந்த உணவுத் திருவிழா.  செவி குளிர கேளுங்கள்... மனம் நிறைய உண்டு மகிழுங்கள்!

நேரடி தொடர்புகளுக்கு:
லஷ்மன் ஸ்ருதி ஈவன்ட் மேனேஜ்மெண்ட் கம்பெனி,
72, 2-வது அவென்யூ, அசோக் நகர், சென்னை - 83.

www.lakshmansruthi.com

9751100444,9841031344,9841044521,9940437076

More Spotlight

 
More Spotlight
 
 
 
Photo Gallery
 
Videos

Trailer of Neethane En Ponvasantham

Trailer of 'Nanban'