Features

கழுதை புராணம்

டி கழுதை என்ன சொன்னாலும் கேக்காதே .. என்ன மனைவி என்  பெண்ணிடம் கத்தி கொண்டு இருந்தாள்... வழக்கமான கத்தல்தான் .. இந்த முறை கழுதையாவது என்   பெண்  என்ற வித்தியாசம் மட்டும்தான்..

அப்பா கழுதை   என்றால் என்ன.. என்ன பையன் மெதுவாக அவன் அம்மா காதில் விழாதவாறு என்னிடம் கேட்டான்..

அவனுக்கும் இந்த நாமகரணம் பல முறை சூட்ட பட்டு இருந்தாலும், இந்த முறை இது அவனின் அக்காஉடையது   என்பதால் கொஞ்சம் அக்கரையுடன் தான் கேட்டான்.
அர்த்தம் தெரித்து வைத்து இருந்தால் பிறகு அதை வைத்து அவளை   வம்புக்கு இழுக்கலாம் இல்லியா ..

நான் கொஞ்சம் யோசித்து நீட்டி வளைத்து கழுதையின் பின்குறிப்பு முன்குறிப்பு எல்லாம் சொல்லி. குதிரைக்கும் மாட்டுக்கும் நடுவே என்றெல்லாம் சொல்லி பார்த்துவிட்டு கூகிள் மாமாவிடமும்  கேட்டு விட்டு கடைசியாக அவனக்கு விளக்கம் அளிப்பது விட நேரிலேயே காட்டி விடுவது என்று முடிவு எடுத்தேன் .அட்லாஸ்ட் கழுதை தானே.... சிங்கம் புலி ஒன்றும் இல்லியே ... கொஞ்சம் மெனக்கெட்டால் ஆயிற்று ...
அடுத்த சண்டே கழுதை தர்ஷனம் என்று முடிவு செய்து விட்டாகிகிவிட்டது
ஆஃபிஸில் அமர்ந்து யோசித்தபோது ஒரு பழைய பாடல் மனதில் ஓடியது.. " கங்கை கரை தோட்டம் ,, கன்னி பெண்கள் கூட்டம் .. கண்ணன் நடுவினிலே ,, என்ற பாடலை நாங்கள் சிறு வயதிலேயே ரீமிக்ஸ் செய்து கங்கை கரை தோட்டம் ,,  கழுதைகளின்  கூட்டம் .. வண்ணான் நடுவினிலே,, என்று பாடியது..
அப்பாடா அவ்வ்ளவு தானே ... வண்ணானை கண்டு பிடித்தல் காரியம் முடித்தது... ஆனால் இந்த வண்ணான் என்ற வார்தையே எங்கள் குடும்பத்துக்கு கொஞ்சம் allregy தான் ...
ஒரு முறை அம்மா வண்ணான் வந்து இருக்கான் என்று சொன்னதுக்கு,  வண்ணான் என் அம்மாவிடம் உங்கள் பையன் வண்ணான் என்று மரியாதையை குறைவாக கூப்பிட்டான் என்று compalin செய்தது ஞாபகம் வந்தது..
இனி வண்ணான்எப்படி மரியாதையாக கூப்பிட வேண்டும் என்று அன்று இரவு குடும்பமே  kumdumbame கூடி யோசித்து விட்டு இனி வண்ணான் என்ற வார்தையே உபயோகிக்க கூடாது என்று முடிவு செய்தோம் .

அடுத்த நாள் முதல் நான் மரியாதையாக டோபி என்று அழைக்க.. என் அண்ணண் டோலி ,போளி என்றெல்லாம் அழைத்துவிட்டு கடைசியில் கண்ணான் என்று நாமகரணம் செய்து அழைக்க தொடங்கினான்.
Sorry எங்கேயே நிறுத்தினேன் ,,ஆங் வண்ணானை  ... சாரி டோபியை கண்டு பிடித்தல்..
டாய் என்னடா யோசனை என்றான் என் நண்பன் ... ஒன்றும் இல்லை என்றேன்.. உனக்கு தெரியுமா..ப்ரோமோஷன் லிஸ்ட் வந்து விட்டது வழக்கம் போல் உன் பேர் இல்லை என்றான் ..இம்ம் அது தெரிந்த விஷயம் தானே என்றேன் .. என்ன பண்ணுவது அட்ஜஸ்ட் பண்ணிவிட்டு போக வேண்டியது தான் ,, நம்ம குணமே அப்படித்தானே...
என்ன ஆனால் என்ன எனக்கு  வண்ணானை sorry   கழுதையை கண்டு பிடிக்கவேண்டும்..
சண்டே வந்தது.அன்று தான் எனக்கு  ஒரு விஷயம் தலையில் உரைத்தது ..இப்போது எல்லாம் dry  cleaning தான் என்பதும் வண்ணான் என்ற இனம் extint ஆனா விபரம் என் சிற்றறிவுக்கு மெதுவாகத்தான் எட்டியது..
ஒரு கழுதையை கண்டு பிடிப்பது அவ்வளவு கஷ்டமா .. என் சிறு வயதில் நாயை விட அதிகமாக ஊர்எல்லாம் சுற்றி திரிந்த கழுதை எங்கே இப்பொது
????
தனக்கு சுற்றிலும் நடப்பது எல்லாவர்றியும்    கண்டு சகித்து கொண்டு, தான் வாலில் பட்டாசு வைத்தாலும் ஒன்றும் கவலை படாத அசராத அமைதியாக தான் உண்டு தான் வேலை உண்டு என்று நடந்த அந்த அற்புத விலங்கு எங்கே இப்போது..
செல்போன் டவர்களால் அழிந்து போயிற்று என்று காக்கைக்கு கூட குரல் குடுத்த கலாச்சார காவலர்கள் எங்கேயே போனார்கள். நாம் தலைவர் சீமானிடம் சாரி மரியாதையை மறந்து விடுகிறேன் .. சீமாரிடம் சொல்லி வெளுக்க வேண்டும் என்று எண்ணி கொண்டேன்..
இருந்தாலும் ஒரு சுற்று சுற்றி பார்த்துவிட்டு தான் என் தோல்வியை ஒப்பு கொள்வது என்று முடிவு செய்து விட்டு சட்டையை போட்டுகொண்டு கிளம்பினேன்
நோ என்ட்ரியில் பாயும் வாகனங்கள், ஓட்டை ஒடிசலான சாலைகள் , ரோட்டிலியே ஒன்றுக்கு போகும் பிருகஸ்பதிகள் , ஊழல் வழக்குகள், ரோடு சைடு ரோமியோக்கள் , எங்கும் சுற்றி திரியும் நாய்கள்  என பலவும் என் கண்ணில் பட்டாலும் ஒரு கழுதையை கூட பார்க்க முடியவில்லை,,

தோல்வியில் துவண்டு மெதுவாக வீடு திரும்பினேன் .. என் மகன் ஆவலுடன் ஓடி வந்து அப்பா கழுதையை பார்த்திரீகளா.. கழுதை எப்படி இருக்கும் என்று கேட்டான்.

அப்போதுதான் எனக்கு உரைத்தது ..என்ன நடந்தாலும் வடிவேலு மாதிரி தாங்கி கொள்ளும் நம்மை விட மிக பெரிய கழுதை  இருக்க முடியுமா..
டாய் கழுதை என்னை மாதிரி தான் இருக்கும் புரியுதா என்றேன் ,, பையன் புரிந்த மாதிரி தலை ஆட்டினான் ..என்னக்கு முகம் நீள்வது போல் தோன்றிது...

நன்றி
C.V .மகேஷ் ..

More Features

 
More Features
 
 
 
Photo Gallery
 
Videos

Trailer of Neethane En Ponvasantham

Trailer of 'Nanban'